டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

உடுமலை:  டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு  உடுமலையில் துவங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்  சண்முகசுந்தரம் முயற்சியால்  போட்டித் தேர்வுக்கான கூடுதல்  தன்னார்வலர் பயிலும் வட்டம் உடுமலையில் துவங்கப்பட்டுள்ளது.  நிகழ்ச்சியில் சண்முகசுந்தரம்   எம்பி., வரவேற்றார். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் பயிற்சியின் முக்கியத்துவம், மேற்கொள்ள வேண்டிய கூடுதலான முயற்சிகள், தவறாமல் வகுப்பில் கலந்து கொள்ள வேண்டியதின் அவசியம் மற்றும் பயிற்சி தரும் ஆசிரியர்களின் சிறப்பு குறித்து விரிவாக எடுத்துக்  கூறி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்  செல்லத்துரை, நகர் மன்ற தலைவர் மத்தீன், ஆசிரியர் கோபிநாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: