மாநில ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி பரிசுகளை வென்ற மதுரை அணி

மதுரை: மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் மதுரை அணி வென்று பரிசுகளை பெற்றது. மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் மதுரை மாவட்ட அணியை சேர்ந்த மாணவிகள் பரிசுகளை வென்றனர். முதல் பரிசை மாணவி யோகிதா (கேந்திரிய வித்யாலயா), சுதிஷ்கா (விஷ்டம் வெல்த் இன்டர்நேஷனல் பள்ளி), மஹாலக்ஷ்மி (ஒய்டபிள்யுசிஏ), யாத்துரு(வண்டியூர் அரசுப் பள்ளி) வென்றனர். இரண்டாம் பரிசுகளை வருண் (மதுரை பப்ளிக் பள்ளி), ஜாபினா ரீமாஸ், மொஹமது ரினாப்(மஞ்சனக்கரை அரசுப் பள்ளி), கஷிஷ்(சித்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) வென்றனர். மூன்றாம் பரிசுகளை சுஜித் (விஷ்டம் வெல்த் இன்டர்நேஷனல் பள்ளி), ரித்திகா (சி.இ.ஒ.எ பள்ளி), தமிழினி (மகாத்மா பள்ளி), கோ.பிரபன்ஜன் (அஷ்வதா பள்ளி) வென்றனர். பரிசுகளை வென்ற வீரர், வீராங்கனைகளை மதுரை மாவட்ட செயலாளர் கருணாகரன், பயிற்சியாளர் சோனா பாராட்டினர்.

Related Stories: