×

வேளாளர் மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா

ஈரோடு: ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் மகளிர் கல்லூரியில் 53-வது விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அண்ணாவி பங்கேற்று, கொடியேற்றி துவக்கி வைத்தார்.  போட்டி முடிவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார். முன்னதாக கல்லூரி முதல்வர் ஜெயந்தி வரவேற்றார். கல்லூரி விளையாட்டுத்துறை இயக்குனர் மாலதி விளையாட்டுத்துறை ஆண்டறிக்கையை வாசித்தார். விளையாட்டுத்துறை மாணவ செயலாளர் பொற்கொடி நன்றி கூறினார்.

Tags : Sports Festival ,Velalar Women's College ,
× RELATED பரமக்குடியில் விளையாட்டு விழா