கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருள் விற்ற 3 பேருக்கு அபராதம்

கொடைக்கானல்: கொடைக்கானல் அண்ணா சாலை பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவதாக நகராட்சி சுகாதார பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நகராட்சி சுகாதார அலுவலர் தினேஷ் குமார், சுகாதார ஆய்வாளர் சுப்பையா, மாரிமுத்து உள்ளிட்டோர் நேற்று அண்ணா சாலை பகுதி கடைகளில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது 3 வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அலுவலர்கள், 3 பேருக்கும் சேர்த்து ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

Related Stories: