பழநியில் தீ தடுப்பு விழிப்புணர்வு

பழநி: கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் அதிகளவு தீவிபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அந்தந்த பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தீ விபத்து தடுப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி பழநியில் குடிசைகள் அதிகமாக உள்ள பகுதிகளில் தற்போது ஜே.ஆர்.சி அமைப்பு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்படும் வழிமுறைகள், தீ விபத்தின் வகைகள், சமையல் செய்யும் போது எவ்வாறு தீ விபத்தினை தடுப்பது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், தீ விபத்து ஏற்பட்டால் தகவல் தெரிவிக்கும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

Related Stories: