×

திண்டுக்கல் கொட்டப்பட்டி காலனி மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ெகாட்டப்பட்டி காலனி மக்கள் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் விசாகனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:  திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், பள்ளபட்டி கிராமம், கொட்டப்பட்டி ஜெயந்தி காலனி உட்பட்ட பகுதியில் வீடு கட்டி கடந்த 30 வருடங்களாக குடியிருந்து வருகிறோம். இப்பகுதியில் 19 நபர்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு திண்டுக்கல் மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மனு அளித்தோம். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தற்போது 5 மாதங்கள் ஆகியும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை. நாங்கள் இந்து அருந்ததியர் சமூகம் ஆகும். ஆகவே எங்கள் மீது கருணை கூர்ந்து நாங்கள் கொடுத்த மனு மீது பரிசீலனை செய்து  இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்படி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.


Tags : Dindigul Kottapatti ,Colony ,
× RELATED திருத்தங்கல்லில் சாலையின் நடுவே...