பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே சடையம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 18ம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம் தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் நல்லநாகு, அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்து, ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விமலா, பெற்றோர் ஆசிரியர் கழத்தலைவர் தவமணி, துணை தலைவர் ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் மாரியம்மாள் ஆகியோர் பேசினர். ஆசிரியர்கள் சாந்தி, ராஜலட்சுமி, மோகனா ஆகியோர் ஆண்டறிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். மாணவர்கள் நடனம், பாட்டு, நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். முன்னதாக தலைமை ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்று பேசினார். ஆசிரியர் கமலஹாசன் நன்றி கூறினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.