×

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் நேற்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளர் வசந்தகுமார் தலைமை வைகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும். பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்புதியும் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags : Tamil Nadu Village Administrative Officers' Association ,
× RELATED விஏஓ.,க்கள் போராட்டம்