×

107 பேர் ஆப்சென்ட் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

தா.பழூர்: தா. பழூர் சிவாலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் தா.பழூர்  விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாத சுவாமி கோயிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு காலை முதல் பால், தயிர், நெய், மஞ்சள் பொடி, மாப்பொடி, அருகம்புல் பொடி, கரும்பு சாறு, பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை  காலபைரவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதில் காலபைரவருக்கு மங்கள இசையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை வணங்கி அருளை பெற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை சிவாச்சாரியார் மற்றும் விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாத சுவாமி கோயில் வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.



Tags : Absent ,Theibira ,Kalabhairava ,Ashtami ,
× RELATED அரூர் வாணீஸ்வரர் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை