×

சீர்காழியில் இன்று மின் குறைதீர் கூட்டம்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின்சார வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட நகர் சீர்காழி, மேற்கு சீர்காழி, கொள்ளிடம், மாதானம், அரசூர், காளி, புறநகர் மணல்மேடு, நகர் மணல்மேடு வைத்தீஸ்வரன்கோயில், தரங்கம்பாடி, செம்பனார்கோயில், ஆக்கூர், பூம்புகார், திருக்கடையூர், கிடாரங்கொண்டான், திருவெண்காடு பிரிவு அலுவலகத்தை சார்ந்த பகுதிகளில் உள்ள மின் உபயோகிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று (15ம்தேதி) செயற்பொறியாளர். இயக்குதலும் மற்றும் பராமரித்தலும், சீர்காழி அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் சசிதரன் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்கூட்டதில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Sirkazhi ,
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...