தமிழ்நாடு அரசின் திட்டங்களை கடைக்கோடி மக்களும் அறியும் வகையில் பணியாற்ற வேண்டும்: சிவகாசி மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன் பேச்சு

சிவகாசி , மார்ச் 14: அரசின் திட்டங்களை கடைக்கோடி மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் கழக நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்று வட்டக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவகாசி மாநகர திமுக செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன் பேசினார்.சிவகாசி மாநகராட்சியில் திமுகவில் சிவகாசி, திருத்தங்கல் என 6 பகுதி கழகம், 48 வட்ட கழகங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தங்கம்தென்னரசு ஆலோசனைக்கு இணங்க சிவகாசி மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன் தலைமையில் சிவகாசி மாநகர திமுக ஆலோசனை கூட்டம், பகுதி கழக ஆலோசனை கூட்டங்கள் முடிந்து தற்போது வட்டங்கள் வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆலோசனை கூட்டங்களில் மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன், மாநகர மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் மற்றும் திமுக கவுன்சிலர்கள், பகுதி கழகச் செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

48 வட்ட கழகங்களில் 14 வட்ட கழக ஆலோசனைக்கூட்டம் முடிந்துள்ள நிலையில் நேற்று திருத்தங்கல் மண்டலத்தில் 22வது வட்ட கழக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர திமுக செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன் கலந்து கொண்டு பேசும்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்ற வகையில் கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் கழக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வைக்கும் வகையில் கழக நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். அரசின் திட்டங்களை கடைக்கோடி மக்களும் தெரிந்து கொள்ள வகையில் கழக நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்றார்.

Related Stories: