குன்றக்குடியில் ப.மு.ராமசாமி அம்பலம் நினைவு சண்முகநாதன் காவடி மண்டபம் திறப்பு விழா

காரைக்குடி, மார்ச் 14: காரைக்குடி அருகே குன்றக்குடியில் கோட்டையூர் பேரூராட்சி முன்னாள் சேர்மன் ராம.சுப.வயிரவன் அம்பலம், கோட்டையூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் வயி.வியாஜ வயிரவன்அம்பலம் ஆகியோரின் தெய்வத்திரு ப.மு.ராமசாமி அம்பலம் நினைவு அருள்மிகு சண்முகநாதன் காவடி மண்டபம் திறப்பு விழா நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், குன்றக்குடி ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் காவடி மண்டபத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.

விழாவில் முன்னாள் அமைச்சர் தென்னவன், எம்எல்ஏ மாங்குடி, முன்னாள் எம்எல்ஏ சுப.துரைராஜ், சப் டிஜிஸ்டர் சூசை, திமுக ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, கல்லல் ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணம்அசோகன், சாக்கோட்டை ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் சுப.முத்துராமலிங்கம், சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேவிமாங்குடி, ஊராட்சி மன்ற தலைவர் அலமேலுமங்கை, துரைசிங்கம், குன்றக்குடி சங்கர்குருக்கள், கல்லல் ஒன்றியகுழு உறுப்பினர் மருதுபாண்டி,

கானாடுகாத்தன் பேரூராட்சி தலைவர் ராதிகா, கோட்டையூர் பேரூராட்சி செயல் அலுவலர் கவிதா, கோட்டையூர் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜேஸ்வரிஅழகப்பன், கோட்டையூர் பேரூராட்சி கவுன்சிலர் கோவிந்தசாமி என்ற ராமு, மாவட்ட பிரதிநிதி ராமசாமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் காளீஸ்வரன், பானுமதி, சங்கீதா, திவ்யபாரதிபாண்டித்துரை, பொன்னழகு,

ராஜா, மதிசீனிவாசன், கமலாகனகராஜ், லதாகுமார், பாடகர் ராமகிருஷ்ணன், சாக்கோட்டை ஒன்றியகுழு உறுப்பினர் சொக்கு, வயி.மணிகண்டன், பேச்சிமுத்து, விஜய்ஆனந்த், வர்ஷினி, கேசவ்சாய் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோட்டையூர் முன்னாள் சேர்மன் ராம.சுப.வயிரவன் அம்பலம், விஜயா ஆகியோர் நன்றி கூறினார்.

Related Stories: