இளையான்குடி, மார்ச் 14: இளையான்குடி அருகே தாயமங்கலம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி பெருந்திருவிழா மிகச் சிறப்பு வாய்ந்தது. திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு விழா மார்ச் 29ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்.5 பொங்கல் வைபவம், ஏப்.6 மின்சார அலங்கார தீப தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.