திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் பை, கப் 100 கிலோ பறிமுதல்

திண்டுக்கல், மார்ச் 14: திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் தற்காலிக கடைகள் வியாபாரத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்படி, மாநகர நல அலுவலர் மருத்துவர் இந்திரா முன்னிலையில் துப்புரவு ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், ரங்கராஜன் மற்றும் பணியாளர்கள் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் என சுமார் 100 கிலோவினை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: