×

லால்குடியில் புதிய வகுப்பறைகள் கட்டுமான பணிகளை எம்எல்ஏ ஆய்வு

லால்குடி, மார்ச் 14: லால்குடி சிறுதையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெறும் புதிய வகுப்பறைகள் கட்டும் கட்டுமானப் பணிகளை சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். திருச்சி மாவட்டம் லால்குடியில் சிறுதையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் இருந்து 2021-22 ஆண்டின் ரூ.18 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் 2022-23 ம் ஆண்டின் ரூ.33 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மற்றும் வகுப்பறைகள், 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளியில் நடைபெற்று வரும் கட்டிடப்பணிகளை சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ, நேரில் பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தார். இதில் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், லால்குடி நகராட்சி தலைவர் துரை மாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : MLA ,Lalkudi ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...