சிறுகமணி வேளாண்மை அறிவியல் மையத்தில் தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி

திருச்சி, மார்ச் 14: சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் மார்ச் 23ம் தேதி தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் தேனீக்களின் வகைகள், தேனீ குடும்பம், தேனீ வளர்ப்புக்குரிய உபகரணங்கள், தேனீ கூட்டங்களை கண்டுபிடித்து வளர்க்கும் முறை, தேனீ கூட்டங்களை ஆய்வு செய்யும் முறை, தேனீ பராமரிப்பு, தேனீக்களின் இயற்கை எதிரிகளை நிர்வகிக்கும் முறைகள், தேனீக்களின் உணவு பயிர்கள், தேன் சுத்தம் செய்தல் மற்றும் தேன் சேமிப்பு முறைகள், தேனீ வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல், சந்தை தகவல் ஆகியவை இப்பயிற்சியில் அடங்கும். மேலும் தேனீ வளர்ப்பு குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய புத்தகம் வழங்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சி நடைபெறும் நாள் அன்று காலை 9 மணிக்கு நேரில் வந்து பயிற்சி கட்டணமாக ₹ 590 செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். வரும் மார்ச்22ம் தேதி வரை பயிற்சிக்கான முன்பதிவு நடைபெறும். முன்பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே பயிற்சியில் அனுமதிக்கப்படுவர். இது குறித்த மேலும் தகவல்களுக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி என்ற விலாசத்தில் நேரிலோ அல்லது 0431296285/ 8122586689 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: