திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்: திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

திருவாரூர், மார்ச் 14: அமைச்சர் பொறுப்பேற்று முதல்முறையாக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என திமுக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருவாரூர் நகர அலுவலகத்தில் நேற்று மாவட்ட அவைத் தலைவர் மேலவாசல் தனராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர்கள் முத்துப்பேட்டை கார்த்தி, ராமகிருஷ்ணன், பொருளாளர் வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஞானசேகரன், ஆடலரசன், ஆர். எஸ் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில், ஜெயதேவன், கலைவாணி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாரூர் நகர செயலாளர் வாரை பிரகாஷ் வரவேற்றார்.

இதில் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். இதில் அமைச்சர் பொறுப்பேற்று முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று வருகை தரும், திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச் சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் திருவாரூர் ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா நன்றி கூறினார்.

Related Stories: