நாச்சிக்குளம் அரசு பள்ளியில் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

முத்துப்பேட்டை, மார்ச் 14: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் நாச்சிக்குளம் மேல்நிலைப்பள்ளியில் திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளங்கலை சமூகப்பணித்துறை மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதற்கு தலைமையாசிரியர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார்.

முனைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். முத்துப்பேட்டை காவல் துணை ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், செருபனையூர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் செந்தில்குமாரி, குழு ஆலோசகர் முனைவர் லோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியை கல்லூரி மாணவர்கள் சந்தியா, பாரதிராஜா, லாவன்யா, சேமகாளிஸ்வரி, வீரசெல்வன், ராகுல்ராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தி மாணவர்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: