×

கால்நடைத்துறை ஆலோசனை; சேதமடைந்த சிலை சீரமைப்பு; நாச்சிக்குளம் அரசு பள்ளியில் மீண்டும் காந்தி சிலை திறப்பு

முத்துப்பேட்டை, மார்ச் 14: முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மீண்டும் காந்தி சிலை திறக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான மார்பளவு காந்தி சிலை சில வருடங்களுக்கு முன்பு சேதமடைந்தது. இதனால் அதன் பீடத்திலிருந்து சமீபத்தில் அகற்றப்பட்டு பணிகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் சில தினங்களுக்கு முன் காந்தியின் மார்பளவு சிலை அங்கு நிறுவப்பட்டது. இந்த நிலையில் நேற்று புதிய சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் செந்தில்குமாரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் முன்னிலை வகித்தனர். முன்னதாக பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தாஹிர் வரவேற்றார்.

காந்தி சிலையை அப்பகுதி விவசாய சங்க தலைவர் செங்குட்டுவன் திறந்து வைத்து மாலை அணிவித்தார். இதில் கூட்டுறவு சங்க தலைவர் பக்கிரிசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர் நாச்சிகுளம் தாஜுதீன், பின்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முருகையன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முகைதீன் பிச்சை, தமிழ் சங்க தலைவர் பொன்.வேம்பையன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் அழகிரி நாச்சிகுளம் ஜமாத் தலைவர் அலாவுதீன், தமிழ் இலக்கியச்சோலை தலைவர் தனுஸ் பாண்டியன், சாகுல்ஹமீது, சேக் அலாவுதீன், தங்கராசு, முனியப்பன், வடிவேல், மகேஷ் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சேதமடைந்த சிலைக்கு பதிலாக மீண்டும் சிலை அமைக்கப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Gandhi ,Nachikulam Government School ,
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...