கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பு: கபிஸ்தலம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

தஞ்சாவூர், மார்ச் 14: கபிஸ்தலம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவர் சடத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள அலவந்திபுரம் காவிரி ஆற்றில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்த முதியவர் அருகில் பூச்சி மருந்து பாட்டில் ஒன்று கிடந்தது. இதனால் அவர் பூச்சி மருந்தை குடித்துதற்கொலை செய்து கொண்டாரா? இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இறந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: