×

தஞ்சாவூரில் சிலம்பம் கற்கும் இல்லத்தரசிகள்

தஞ்சாவூர், மார்ச் 14: தஞ்சாவூரில் குடும்பத்தலைவிகள் சிலம்பம் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகவும், தற்காப்பு கலையாகவும் திகழ்ந்து வருகிறது சிலம்பம். சிலம்பம் பயின்றவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என அரசு அறிவிப்புக்கு பின் சிலம்பம் கற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சிலம்பம் பயிற்சியாளர்கள் மூலம் கற்றுத் தரப்படுகிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் திருமணம் ஆன நடுத்தர வயது குடும்பத்தலைவிகள் சிலம்பம் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, கணவரை வேலைக்கு அனுப்புவது என காலையில் தொடங்கும வேலை இரவு படுக்க போகும்வரை ஓய்வில்லாமல் வேலை செய்வதால் மன அழுத்தத்துக்கு ஆளாகி வருவதால் மனமும், உடலும் ஒரு நிலைப்படுவதோடு இளமையோடு இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதால் சிலம்பம் கற்றுக்கொள்ள ஆர்வம் ஏற்பட்டதாக இல்லத்தரசிகள் தெரிவித்தனர்.

Tags : Silambam ,Thanjavur ,
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு