×

அய்யம்பேட்டை மகா காளியம்மன் கோயிலில் பால்குட திருவிழா

கும்பகோணம், மார்ச் 14: கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை தில்லை மகாகாளியம்மன் கோவில் பால்குட திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டை மேட்டு தெருவில் அமைந்துள்ளது தில்லை மகாகாளியம்மன் கோயில். இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு முன்னதாக நேற்றுமுன்தினம் அம்மனுக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி காப்பு கட்டுதல் மற்றும் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழாவை முன்னிட்டு நேற்று குடமுருட்டி ஆற்றிலிருந்து மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் பால்குடம், பன்னீர்குடம் மற்றும் பல்வேறு வகையான காவடிகள் எடுத்து, பக்தர்கள் உற்சவமூர்த்தியுடன் அய்யம்பேட்டையின் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக் குழுவினர், அய்யம்பேட்டை மேட்டுதெரு கிராமபொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Balkuta Festival ,Ayyampet Maha Kaliamman Temple ,
× RELATED திருநாகேஸ்வரம் கவுமாரியம்மன் கோயில்: 58ம் ஆண்டு பால்குட பெருவிழா