கந்தர்வகோட்டை,மார்ச் 14: கந்தர்வகோட்டை கடைவீதியில் உள்ள தெரு விளக்குகளையும், குப்பைகளையும் முறையாக பாராமரித்து வர வேண்டும் என தேசிய நெடுச்சாலை துறைக்கு கந்தர்வகோட்டை வர்த்தக சங்க தலைவர் பழ.மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகருக்கு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் அரசு ஊழியர்களும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் குப்பைகளை அகற்றாமல் இருப்பதால் காற்றில் தூசி கலந்து இதனால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையாக நோய் பரவும் சூழ்நிலை ஏற்படுகிறது.