×

பொன்னமராவதி அருகே ஊராட்சி ஆரம்பப் பள்ளியில் முப்பெரும் விழா: கந்தர்வகோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகளை அகற்ற வேண்டும்

கந்தர்வகோட்டை,மார்ச் 14: கந்தர்வகோட்டை கடைவீதியில் உள்ள தெரு விளக்குகளையும், குப்பைகளையும் முறையாக பாராமரித்து வர வேண்டும் என தேசிய நெடுச்சாலை துறைக்கு கந்தர்வகோட்டை வர்த்தக சங்க தலைவர் பழ.மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகருக்கு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் அரசு ஊழியர்களும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் குப்பைகளை அகற்றாமல் இருப்பதால் காற்றில் தூசி கலந்து இதனால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையாக நோய் பரவும் சூழ்நிலை ஏற்படுகிறது.

ஏறத்தாள ஆறு மாத காலமாக நெடுஞ்சாலை துறையினர் குப்பைகளை அகற்றாமல் உள்ளதால் சாலையில் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளது. காகிதங்கள் காற்றில் பறந்து சாலையில் செல்வோர் மீது விழுகிறது  மற்றும் வாகனங்கள் செல்லும் போது தூசி மிகவும் அதிகமாக ஏற்படுகிறது. இதனால் சாலையை பயன்படுத்துவோர் மற்றும் பாதசாரிகளுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை முறையாக தொழிலாளர்களை பணியில் அமைத்து சாலையை தூய்மை செய்ய வேண்டும் என வர்த்தக சங்கத் தலைவர் மாரிமுத்து மற்றும் சங்க செயலாளர் தட்சிணாமூர்த்தி நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags : Panchayat Primary School ,Ponnamaravathi ,Tri-Parhu Festival ,National Highway ,Gandharvakottai ,
× RELATED தொள்ளாழி ஊராட்சி ஆரம்ப பள்ளியில் புதர்கள் அகற்றம்