×

பெரம்பலூர் மாவட்டத்தில் 7,439 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்


பெரம்பலூர்,மார்ச் 14: பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-2 பொதுத் தேர்வில், 34 மையங்களில் 7,439 பேர் தேர்வெழுதினர். 270 பேர் தேர்வெழுத வரவில்லை. தமிழக அளவில் பிளஸ்-2 எனப்படும் பன்னிரண்டாம் வகுப்பிற்கு அரசுப் பொதுத் தேர்வு 13ம்தேதி தொடங் கி ஏப்ரல் 3ம்தேதி வரை நடைபெறுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில், 40 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 2 ஆதிதிராவிடர் நலப் பள்ளி கள், 1அரசு மாதிரிப் பள்ளி, 4 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 12 சுயநிதிப் பள்ளிகள்,20மெட்ரிக்பள்ளிகள் என மொத்தம் 79 பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவியரும், தனித்தேர்வர்களும் என 3,915 மாணவர்களும், 3,794 மாணவிகளும் என மொத்தம் 7,709 பேர்கள் தேர்வேழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இதில் நேரடி தேர்வர்களுக்காக 33 பள்ளிகளிலும், தனித் தேர்வர்களுக்கான பெரம்பலூர், எளம்பலூர் சா லையிலுள்ள உப்போடை ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் என 34 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டிருந்தன.

நேற்று நடைபெற்ற முதல் நாள் தேர்வில் 3,739 மாண வர்கள், 3,694 மாணவிகள் என மொத்தம் 7,439 பேர் கலந்துகொண்டு தேர்வெ ழுதினர். நேற்று மொழிப் பாடங்களுக்கு நடந்தத் தே ர்வில் 3மாணவிகள் பிரெஞ் சு பாடத்திற்கும், 1மாணவர் ஹிந்தி பாடத்திற்கும் தேர் வு எழுதினர். முதல்நாள் தே ர்வுக்கு 166 மாணவர்கள், 104 மாணவிகள் எனமொத் தம் 270பேர் தேர்வெழுத வரவில்லை.

தேர்வு மையங்களை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டுஆய்வு செய்தார். அரசுப் பொதுதேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் நடக் கக்கூடிய காப்பியடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செய ல்களில் ஈடுபடுவோரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க பெரம்பலூர், மாவ ட்ட முதன்மைக் கல்வி அலு வலர் அறிவழகன், மாவட்ட க் கல்வி அலுவலர்(மேல்நி லை) (பொறுப்பு) வேலு, மா வட்டகல்வி அலுவலர்(தனி யார்) சண்முக சுந்தரம், பெரம்பலூர் மாவட்ட அரசுப் பொது தேர்வுகளுக்கான கண்காணிப்பு அலுவலரா ன தஞ்சை சரஸ்வதி மஹால் நிர்வாக அலுவலர் முத்தையா, பெரம்பலூர் மாவட்ட அரசுத்தேர்வுத்துறை உதவி இயக்குநர் கல்பனாராத் ஆகிய 4 பேர்கள் தலைமையில் பறக்கும்ப டைகள் அமைக்கப்பட்டு தே ர்வுமையங்கள் அதிரடியா க சோதனையிடப்பட்டன.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்