பிளஸ் 1 தேர்வு இன்று துவக்கம் நெல்லை மாவட்டத்தில் 19,781 பேர் எழுதுகின்றனர்

நெல்லை, மார்ச் 14: பிளஸ்2 தேர்வை தொடர்ந்து பிளஸ்1 தேர்வு தமிழகம், புதுவையில் இன்று (14ம் தேதி) துவங்குகிறது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு நேற்று துவங்கிய நிலையில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று (14ம் தேதி) துவங்குகிறது. இதற்காக 69 தேர்வு மையங்களும் மத்திய சிறை உள்ளிட்ட 4 தனித்தேர்வர்களுக்கான மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வை 11 ஆயிரத்து 172 மாணவிகள், 8 ஆயிரத்து 609 மாணவர்கள் என மொத்தம் 18 ஆயிரத்து 781 பேர் எதிர்கொள்கின்றனர். தொடர்ந்து வரும் ஏப். 5ம் தேதிவரை தேர்வு நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

 பிளஸ் 1 தேர்வு நடைபெறாத வேலை நாட்களில் பிளஸ்2 தேர்வு நடைபெறும் வகையில் அட்டவணையிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வை கண்காணிக்க பறக்கும் படையினர்,  நிற்கும் படையினர் உள்ளிட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வுக்கான பலத்த ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருப்பதி செய்துள்ளார். பிளஸ்2 மற்றும் பிளஸ்1 தேர்வுகள் இம்மாதம் முழுவதும் தொடர்ச்சியாக காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணிவரை நடைபெறுவதால் பிற வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் பிற்பகலில் நடைபெறும் வண்ணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: