சிவகாசி கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்.ஆர் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஜினியரிங் ஆகியவற்றின் புதிய தொழில்நுட்பங்கள் எனும் தலைப்பில் தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு பி.எஸ்.ஆர் கல்வி குழுமங்களின் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். இதில் பி.எஸ்.ஆர் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு துறை தலைவர் வளர்மதி மற்றும் கணினி அறிவியல் துறை தலைவர் ராமதிலகம் சிறப்புரையாற்றினர். கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள் சுரேஷ்பாண்டியராஜன், ஜி.எஸ்.ராஜ், ராஜசத்தியா, கங்காதேவி ஆகியோர் செய்திருந்தனர். மாணவி அபர்ணா நன்றி கூறினார்.

Related Stories: