தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி முகாம்

காரியாபட்டி: காரியாபட்டி வட்டார வளமையத்தில் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் இயக்கத்தின் சார்பாக புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் வாழ்வியல் திறன் பயிற்சி கல்குறிச்சியில் நடைபெற்றது. இப்பயிற்சியில் அரசு மருத்துவமனை சித்தமருத்துவர் மாமல்லன் உடல்நலம் மற்றும் சுகாதாரம் பற்றி பயிற்சி அளித்தார். திறன் மேம்பாட்டு துறை மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் இராஜேஷ்பாபு, மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பாலசுப்பிரமணியன், ரமேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: