அரியலூரில் மகளிர் தின விழா பேரணி

அரியலூர், மார்ச் 13: அரியலூரில் சர்வதேச பெண்கள் தினத்தைமுன்னிட்டு, பேரணி மற்றும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு தொடங்கிய பேரணியை சிஐடியு மாவட்டச் செயலாளர் துரைசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது. பிரதான சாலை வழியாக அண்ணா சிலையில் நிறைவடைந்தது. தொடர்ந்து அண்ணா சிலை அருகே கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாநிலச் செயலாளர் தேவமணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் மேரி, அங்கன்வாடி மாநிலத் தலைவர் ரத்தினமாலா ஆகியோர் பங்கேற்று பேசினர்.

தொடர்ந்து, பெண்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும். சமவேலைக்கு சம கூலி வழங்க வேண்டும். பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிக படுத்த வேண்டும். பெண் சொத்துரிமை, தனி பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சிற்றம்பலம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள்,அங்கன் வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: