அறங்காவலர் நியமனம் மாவட்டக்குழு ஆலோசனை

திருப்பூர்: இந்து அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக மாவட்ட குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் உள்ள கோவில்களுக்கு, தலா 5 பேர், 3 பேர் மற்றும் ஒருவர் வீதம், அறங்காவலர் நியமனம் நடக்க உள்ளது. இதுதொடர்பாக, திருப்பூர் மாவட்ட குழுவினர் நேற்று ஆலோசித்தனர். இதுகுறித்து மாவட்ட குழு தலைவர் சுப்ரமணியம் கூறுகையில்,``மாவட்ட அளவில் 700 கோவில்களுக்கு, அறங்காவலர் நியமனம் நடக்க உள்ளது. இதுவரை 200 கோவில்களுக்கு மட்டும், விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. விரைவில் அறங்காவலர் குழு அமைப்பது தொடர்பாக ஆலோசித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: