மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய அரசிடம் நிதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் பேச்சு

சிவகங்கை: அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற ஒன்றிய அரசிடம் பரிந்துரை செய்து, தேவையான நிதி மற்றும் சலுகைகளை பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எம்பி கார்த்திசிதம்பரம் பேசினார். சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி முன்னிலை வகித்தார்.  கண்காணிப்பு குழு தலைவர், சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தலைமை வகித்து பேசியதாவது, சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களும் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற ஒன்றிய அரசிடம் பரிந்துரை செய்து, தேவையான நிதி மற்றும் சலுகைகளை பெற்றுத் தருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும். இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில், தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், உதய் திட்டம், பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா, சமக்ர சிக்ஷா, தேசிய சமூக உதவித் திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் திட்டம், பிரதம மந்திரி வேலை வாய்ப்புத் திட்டம், சத்துணவுத் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், தேசிய ரூர்பன் திட்டம், நாடாளமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ஒன்றிய, மாநில அரசின் துறைகள் ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், நிதிநிலை, மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் துறை சார்ந்த அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.  கூட்டத்தில் எம்எல்ஏக்கள் தமிழரசிரவிக்குமார், மாங்குடி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: