திருப்பாச்சேத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகள் கலெக்டர் ஆய்வு

திருப்புவனம்: திருப்பாச்சேத்தியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடப் பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து 2022-2023 ஆண்டுக்கு சிவகங்கை மாவட்டத்தில் 58 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 120 கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.17.25 கோடி மதிப்பீட்டில் கட்டிடப்பணிகள் நடந்து வருகின்றன.இந் நிலையில் திருப்பாச்சேத்தி நடு நிலைப்பள்ளியில் நடந்துவரும் கட்டிடப் பணிகளை நேற்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி ரெட்டி ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட திட்ட இய்க்குநர் சிவராமன், உதவி செயற் பொறியாளர் மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கண்ணி, ராஜசேகரன், திருப்பாச்சேத்தி ஊராட்சிதலைவர் ராமு,துணைத்தலைவர் சோணைமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: