×

கரூர் ஒன்றிய பகுதியில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்

வேலாயுதம்பாளையம், மார்ச் 13: தமிழகம் முழுவதும் 1000 காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் வாங்கல் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தவிட்டுப்பாளையம், கூலகவுண்டனூர் , புகளூர்உள்ளிட்ட பல்வேறு பள்ளிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கான சிறப்பு காய்ச்சல் பரிசோதனை மருத்துவ‌முகாம் நடைபெற்றது. முகாமில் வாங்கல் வட்டார மருத்துவர் டாக்டர் சுரேந்திரன் தலைமையில் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினர், முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் வைரஸ் காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்தனர்.

காய்ச்சல்கள் உள்ளவர்களுக்கு பரிசோதனை அடிப்படையில் உரிய மருந்து மாத்திரைகள் வழங்கி சிகிச்சை அளிககப்பட்டது. முகாமில் சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சிவக்குமார் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்,காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நலக்கல்வி வழங்கப்பட்டது.

Tags : Karur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...