×

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

பந்தலூர்:  பந்தலூர் அருகே தேவாலா பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட 12.ம் வார்டு வாளவயல் மற்றும் 19ம் வார்டு அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ  சரகம் 2 ஆகிய பகுதிகளில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா நெல்லியாளம் நகர கழக செயலாளர் மு.சேகர் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியின் போது கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  மேலும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கியதோடு, கட்சி கொடியேற்றி வைத்து கொண்டாடினர்.  நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி முன்னிலை வகித்தார்,வார்டு செயலாளர்கள் ஞானபிரகாஷ் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆலன்,நகர துணை செயலாளர் வக்கீல் சிவசுப்பிரமணியம், பொருளாளர் தென்னரசு, மாவட்ட பிரதிநிதி குமார்,ஐடிவிங் அமைப்பாளர் பாலா,துணை அமைப்பாளர்கள் ஜெயசீலன்,ஞானசேகர்,இன்பராஜ்,நகர்மன்ற தலைவர் சிவகாமி,துணை தலைவர் நாகராஜ் வார்டு செயலாளர்கள்முகமது,ரமேஷ்,கோபி,செங்குட்டுவன், தில்லைநாதன்,பாலு,மோகன்ராஜ் கவுன்சிலர்கள் புவனேஸ்வரி, வசந்தகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தியாகராஜ் நன்றி கூறினார்.



Tags : M.K.Stalin. ,
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்