×

திம்பம் மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.
இந்த மலைப்பாதை வழியாக தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனியார் செல்போன் டவர் நிறுவனத்தில் வேலை செய்யும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த சதீஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவர் காரில் தாளவாடி சென்று விட்டு நேற்றுமுன்தினம் இரவு 8 மணி அளவில் மீண்டும் பல்லடம் செல்வதற்காக திம்பம் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தனர்.  4-வதுகொண்டை ஊசி வளைவில் கார் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புதரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சதீஷ், பாலகிருஷ்ணன் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Thimpam hill road ,
× RELATED திம்பம் மலைப்பாதையில் இரவு நேர...