×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: அமைச்சர் முத்துசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

ஈரோடு:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாளையொட்டி, ஈரோட்டில்  அமைச்சர் சு.முத்துசாமி நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திமுக  தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாளையொட்டி,  பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்  ஒரு பகுதியாக, ஈரோடு, சூரம்பட்டி, பாரதிபுரம், அண்ணா நகர் உள்ளிட்ட  பகுதிகளில், திமுக ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளரும், வீட்டு வசதித் துறை  அமைச்சர் சு.முத்துசாமி பொது மக்களுக்கு அரிசி வழங்கினார். முன்னதாக அவர், மோளக்கவுண்டன்பாளையம், அரசுப் பள்ளியில் சிதிலமடைந்த வகுப்பறை சுவரை ஆய்வு செய்தார். இந்த  நிகழ்ச்சியில், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் சூரம்பட்டி பகுதி  திமுக நிர்வாகிகள், பொது மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.


Tags : Chief Minister ,M. K. Stalin ,Minister ,Muthuswamy ,
× RELATED திமுகவின் 40 எம்.பி.க்களும்...