×

பழநி அல்லித்தோப்பு பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் வயல்கள் பச்சை, மஞ்சள் வண்ணம் பூசி ெஜாலிக்கிறது. தாடிக்கொம்பு சர்வீஸ் ரோட்டில் தெரு விளக்குகள் எரியாததால் மக்கள் நடமாட அச்சம் நடவடிக்கை எடுக்குமா நெடுஞ்சாலை துறை

திண்டுக்கல்: தாடிக்கொம்பு சர்வீஸ் ரோட்டில் தெரு விளக்குகள் எரியாததால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நடமாடவே அச்சப்படுகின்றனர். திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு பேரூராட்சி 5 கிராமங்கள், 63 குக்கிராமங்களை கொண்ட மிகப்பெரிய பேரூராட்சி ஆகும். இவ்வூர் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து தாடிக்கொம்புவிற்குள் வருவதற்கு இரு பக்கமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வீஸ் ரோட்டில் தினந்தோறும் திண்டுக்கல், வேடசந்தூர் பகுதிகளில் இருந்து அதிகளவு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் தாடிக்கொம்பு நகருக்குள் வந்து செல்கிறது. தாடிக்கொம்புவிற்கு வரும் இரு சர்வீஸ் ரோடுகளிலும் தேசிய நெடுஞ்சாலை துறையால் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரிவதில்லை. மேலும் சில இடங்களில் விளக்குகள் இல்லாமல் கம்பங்கள் மட்டும்தான் நிற்கிறது. இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் செயின், பணம், செல்போன் உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘தாடிக்கொம்பு சர்வீஸ் ரோட்டின் இரு புறங்களிலும் ஓரமாக வீடுகள், கடைகள் உள்ளன. இரவு 9 மணிக்கு மேல் வீடுகள், கடைகள் அடைக்கப்பட்டு விளக்குகள் அணைத்தவுடன் இப்பகுதியின் பல இடங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால் இப்பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றது. தாடிக்கொம்பு போலீசார் கண்காணிப்பு இருந்தும் தெரு விளக்குகள் எரியாததால் முழுமையாக இரவு ரோந்து பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதற்கே அச்சப்படுகின்றனர். மேலும் திண்டுக்கல், வேடசந்தூர், கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் மைய பகுதியாக தாடிக்கொம்பு உள்ளது. இதனால் தாடிக்கொம்பு பஸ்நிலையத்திற்கு பகல், இரவு நேரங்களில் உள்ளூர், வெளியூர் பயணிகள் அதிகளவு வந்து செல்லுகின்றனர். ஆனால் பஸ் நிலையத்தில் உள்ள ஹைமாஸ் விளக்கு சில மாதங்களாக எரிவதில்லை. இதனால் பயணிகள் அச்சப்படும் நிலை உள்ளது.  எனவே தேசிய நெடுஞ்சாலை துறையினர் தாடிக்கொம்பு சர்வீஸ் ரோட்டின் இருபக்கமும் தெரு விளக்குகள் முறையாக எரிவதற்கும், பேரூராட்சி நிர்வாக்ததினர் பஸ் நிலையத்தில் ஹைமாஸ் விளக்கு எரிவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.sss

Tags : Palani Allithoppu ,Thadikkombu ,
× RELATED தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் 12 அடி உயர துலாபாரம் அமைப்பு