கொடைக்கானலில் பூட்டியே கிடக்கும் லாரி எடை மேடை நிலையத்தை திறக்க வேண்டும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே உள்ளது. இங்கு விவசாய பயன்பாடு மட்டுமின்றி பல்வேறு கட்டுமான பயன்பாட்டுக்கு கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  பெருமாள் மலைப்பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் லாரி எடை மேடை அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சில ஆண்டுகளாக இந்த அலுவலகம் செயல்படாமல் உள்ளது. இதனால் சரக்கு ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை எடை போட முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக கொடைக்கானல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இயங்கும் கனரக வாகனங்கள் முறையான அளவுடன் செல்கிறதா என கேள்விக்குறி எழுந்துள்ளது. இதுபோல் விதிமீறி அதிகளவு சரக்குகள் ஏற்றி செல்லப்படும் கனரக வாகனங்களால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் மூடி கிடக்கும் லாரி எடை மேடை அலுவலக வளாகத்தில் இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்கள் நடப்பதுடன், மது அருந்துவோரின் கூடாரமாகவும் மாறியுள்ளது. எனவே வனத்துறையினர் லாரி எடை மேடையை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: