×

பாளையில் காவல் துறை சார்பில் சைபர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நெல்லை, மார்ச் 12: நெல்லை காவல் துறை சார்பில் சைபர் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் பாளையில் நடந்தது. நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், கல்லூரி நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிப்படையாமல் இருக்க அவர்களுக்கு சைபர் கிரைம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நெல்லை மாவட்ட காவல்துறை மற்றும் மாநகர காவல்துறை சார்பாக சைபர் கிரைம் கருத்தரங்கு கூட்டம் பாளையில் நடந்தது. கருத்தரங்கு கூட்டத்திற்கு நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகர மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். கருத்தரங்கு கூட்டத்தில் நெல்லை மாவட்டத்திலுள்ள வங்கி, கல்லூரி நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றன.

கருத்தரங்கு கூட்டத்தில் நெல்லை எஸ்பி சரவணன், தொழில் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் பாதுகாக்க முக்கிய அறிவுரைகளை வழங்கினார். சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க  (O* (Opportunity) O (Offender) O (Object)) இந்த மூன்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.  இதில் சென்னை தனியார் தகவல் தொழில் நுட்ப இயக்குநர்கள் பொன்மாகிஷான், லெட்சுமி பாலாஜி ஆகியோர் சைபர் கிரைம் பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும், தற்போது நடக்கும் சைபர் கிரைம் குறித்தும் அதிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி ராஜு, மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளர் ரமா, மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரவினா, எஸ்ஐக்கள் ராஜரத்தினம், மோகன் மற்றும் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Cyber Awareness Seminar ,Police Department ,Palai ,
× RELATED பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில்...