×

சாத்தூர் அருகே கோட்டையூர் கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

ஏழாயிரம்பண்ணை: சாத்துார் அருகே கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிக்குட்பட்ட தாயில்பட்டி அருகே உள்ள கோட்டையூர், கீழதாயில் பட்டி உள்ளிட் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீரானது அப்பகுதியில் உள்ள கண்மாயில் கலந்து வருகிறது.  மேலும் கண்மாய்க்குள் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு செய்ததோடு அப்பகுதி மக்கள் சிலர் பன்றிகள், மாடுகள் வளர்க்கப்படுகின்றன. கால்நடை கழிவுகளும், மீன், இறைச்சி கடைகளில் சேரும் இறைச்சி கழிவுகளும் கண்மாய்க்குள் கொட்டப்படுகின்றன. மேலும் சுற்றுப்பகுதியில் உள்ள சிறு தொழிற்சாலைகளின் மருந்து கழிவுகளும் கொட்டப்படுவதால் கண்மாய் முழுவதும் குப்பை மேடாகவும் கழிவுநீர் தேங்கியும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பை கழிவுகள் தேக்கத்தால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.  கண்மாய்கரை ஓரத்தில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு துர்நாற்றம் வீசுகிறது.  இதனால் இப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் அவதிக்கு உள்ளாவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கண்மாயில் கழிவுகளை கொட்டுவதையும், சாக்கடை கலப்பதையும் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Kotayur Kanmai ,Chatur ,
× RELATED சாத்தூர் அருகே மழை இல்லாததால் கருகும் உளுந்து செடிகள்