×

நடுநிலைப் பள்ளியில் தற்காலிக விளையாட்டு மைதானம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்

திருப்புவனம்: திருப்பாச்சேத்தியில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அருகே உள்ள ரயில்வேத் துறைக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.  திருப்பாச்சேத்தியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூற்றுகணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி 1912ம் ஆண்டில் தொடங்கிய பழமையான பள்ளி ஆகும். இந்த பள்ளிக்கு அருகில் ரயில்வேத் துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம்  பயன்படுத்தாமல் உள்ளது. இந்த இடத்தில் தற்காலிக விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி பெற்று  தருமாறு  பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தனது நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்த பள்ளிக்கு, ரயில்வேத் துறைக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ரயில்வே பொதுமேலாளரிடம் கார்த்தி சிதம்பரம் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : Karthi Chidambaram ,
× RELATED ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி...