கூடலூர் நகராட்சியில் தீவிர துப்புரவு பணிகள்

கூடலூர்: கூடலூர் நகராட்சியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் நேற்று அதிகாலை தீவிர துப்புரவு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. கூடலூர் நகர் பகுதிகளில் சாலை ஓரங்களில் தேங்கி கிடக்கும் மண், குப்பைகள், கற்கள் போன்றவற்றை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். நகராட்சி ஆணையர் மேற்பார்வையில் நகர் மன்ற தலைவர் பரிமளா, துணைத் தலைவர் சிவராஜ், உறுப்பினர்கள் உஸ்மான், மும்தாஜ் பேகம் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.

Related Stories: