×

மதுரையில் தமிழ் இசை விழா கோலாகலம்

மதுரை: மதுரையில் தமிழ் இசை சங்கத்தின் 16ம் ஆண்டு தமிழ் இசை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை தமிழ் இசைச் சங்கத்தின் 46ம் ஆண்டு தமிழ் இசை விழா நேற்று முன்தினம் ராஜா முத்தையா மன்றத்தில் துவங்கியது. துவக்க விழாவில் சங்கத் தலைவர் ஏ.சி.முத்தையா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் கலந்து கொண்டார். மதுரை தமிழ் இசைச்சங்க தேவார இசைக் குழுவினர் இன்னிசை நிகழ்த்தினர். நாதஸ்வர வித்வான் பில்லப்பன் குழுவினரின் நாதஸ்வர இசை கச்சேரி நடந்தது. இரண்டாம் நாளான நேற்று சென்னை சிவப்பிரசாத் குழுவினர் திருமுருகாற்றுப்படை புராண நாடகம் நடைபெற்றது. இந்த விழாவில் இன்று (மார்ச் 12) சீர்காழி சிவசிதம்பரம் குழுவினரின் தமிழ் இசை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, நாளை மதுரை தமிழ் இசைச் சங்கம் வழங்கும் ரேவதி ராகத்தில் திருக்குறள் அறத்துப்பால் முற்றோதல். 14ம் தேதி ஓசூர் மஹன்யாயின் பாட்டு கச்சேரி, 15ம் ேததி டாக்டர் ராம் சுந்தரின் வயலின் இசை, 16ம் தேதி மதுரை  கலாகேந்திரா ஹம்ஸினி மகாதேவன் குழுவினரின் பரத நாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. முடிவாக அன்றைக்கு நாட்டிய சாகரா குமாரி மொகுல் முகர்ஜி குழுவினர் வழங்கும் நிருத்யாஞ்சலி பரத நாட்டியத்துடன் விழா நிறைவடைகிறது. தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான அனுமதி இலவசம்.

Tags : Kolagalam ,Madurai ,
× RELATED குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்