×

வையாபுரி குளத்தில் தூய்மை பணி

பழநி:பழநி நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது வையாபுரி குளம். இக்குளம் பழநி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகிறது. இக்குளத்தில் அமலை செடிகள் மற்றும் குப்பைகள் அதிகமாக காணப்படுவதால் தண்ணீரை அதிகம் சேமிக்க முடியாமல் போவதுடன், நீரும் மாசடைந்து காணப்பட்டது. இதனால் குளத்தை தூய்மைப்படுத்த வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பழநி கோட்டாட்சியர் சிவகுமார் தலைமையிலான வருவாய், நகராட்சி தீயணைப்பு துறையினர் வையாபுரி குளத்தினை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இவர்களோடு தன்னார்வலர்கள், பொதுமக்கள் தூய்மைப்படுத்தும் பணியில் கலந்து கொண்டனர்.

மஞ்சள் ஒட்டுப்பொறி செயல் விளக்கம் ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் வட்டம், மண்டவாடி ஊராட்சியில் ஊரக வேளாண்மை பணி அனுபவ பயிற்சியின் ஒரு பகுதியாக மதுரை வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள் பார்த்திபன், ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் மஞ்சள் ஒட்டுப்பொறி குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தனர். பருத்தி செடிகளில் வெள்ளைப்பூச்சியின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மற்றும் கண்காணிக்க மஞ்சள் ஒட்டுப்பொறியை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதில் விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.


Tags : Vayapuri ,
× RELATED கரூர், கோவை சாலையில் டிராபிக் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும்