திண்டுக்கல்லில் வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு தாசில்தார் சந்தனமேரி கீதா தலைமை வகித்தார். துணை தாசில்தார் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 4 ஆண்டுகள் வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வருவாய் உதவியாளர் கிருஷ்ண வேணி நன்றி கூறினார்.

Related Stories: