×

முசிறியில் 2 பைக்குகள் மோதிய விபத்தில் இருவர் காயம்

முசிறி: முசிறியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டம், தா.பேட்டை ரோடு நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்(52). இவர் தனது பைக்கில் திருச்சி நாமக்கல் சாலையில் வந்து கொண்டிருந்தார். திருச்சி சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது மண்ணச்சநல்லூர் வட்டம் பழூர் குடித்தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (30) என்பவர் ஓட்டி வந்த பைக் குணசேகரன் ஓட்டி வந்த பைக்கின் பின்னால் மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். குணசேகரன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் விக்னேஷ் திருச்சி அரசு மருத்துவமனையிலும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து குணசேகரன் அளித்த புகாரின்பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Musiri ,
× RELATED சாலப்பட்டியில் இடமாற்றம் செய்யப்பட்ட ரேஷன் கடை திறப்பு