மணப்பாறை: மணப்பாறை நகராட்சி பேருந்து நிலையத்தில்நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க முகாமை - நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மணப்பாறை நகராட்சி பேருந்து நிலையத்தில் நகரங்களின் தூய்மை மக்கள் இயக்கம் முகாமை நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ் தொடங்கி வைத்து, பின்னர் மணப்பாறை பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சியாமளா, நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துலட்சுமி கோபி மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். இதில் மணப்பாறை நகராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள குப்பைகள், சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், பேருந்து நிலைய பொதுமக்கள் இருக்கும் பகுதியில் உள்ள குப்பைகள் என அனைத்து பகுதிகளிலும் முழுமையாக சுத்தம் செய்தனர்.