கும்பகோணத்தில் சர்வதேச மகளிர் தின விழா

கும்பகோணம்: மகளிர்களின் பாலின சமத்துவத்தையும், உரிமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு மகளிர்களின் சிறப்பு இயல்புகளை பெருமைப்படுத்தி உலகம் முழுவதும் மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் உள்ள மகளிர் அமைப்புகள், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து கும்பகோணத்தில் சர்வதேச மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட துணைத்தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார். பெருமாண்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் சுதா மாணிக்கம் வரவேற்றார்.

இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட தலைவர் ஜீவபாரதி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பெண்ணின் பெருமைகளை எடுத்துரைத்தார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் சங்கரி சிறப்புரையாற்றினார். சிஐடியு தஞ்சாவூர் மாவட்ட தலைவர் கண்ணன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாநகர பொருளாளர் ராஜேஸ்வரி, மாதர் சங்க மாநகர செயலாளர் சுமதி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர். இறுதியாக ஓய்வூதியர் சங்க சங்க வட்ட செயலாளர் பக்கிரிசாமி நன்றி தெரிவித்தார்.

Related Stories: