நாகப்பட்டினம் நகராட்சி சார்பில் தாமரை குளத்தில் தூய்மை பணி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் நகராட்சி சார்பில் தாமரை குளத்தில் மாபெரும் தூய்மை பணி நடந்தது. நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் தேவி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: நாகப்பட்டினம் நகராட்சி பகுதிகள் தூய்மை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு தூய்மைபடுத்தும் பணிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சேகரிக்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகள் அக்கற்றப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவடத்தை தூய்மையான மாவட்டமாக மாற்றிட தன்னார்வலர்கள், பொது மக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களை இணைத்துக்கொண்டு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு மஞ்சப்பை தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் வழங்கினார். தூய்மையான நகராட்சியை உருவாக்குவது குறித்த உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. கவுன்சிலர்கள், தன்னார்வலர்கள், சேவை அமைப்பினர், 100-க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: