×

ஜிலேபி கிலோ ரூ.100க்கு விற்பனை கரூர் மாவட்டத்தில் லோக் அதாலத் 59 வழக்குகளில் ரூ.3.79 கோடிக்கு தீர்வு

கரூர்: கரூர் மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சி மூலம் 59 வழக்குகளில் ரூ.3.79 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. இந்தியா முழுவதும் கொடுக்கல் வாங்கல் மற்றும் நிலப்பிரச்னை ஆகியவற்றை எளிய முறையில் தீர்த்துக் கொள்வதற்காக மக்கள் நீதிமன்ற மூலம் முகாம் நடத்தி வழக்குகளை நேரடியாக தீர்த்து வைத்து வருகிறது. இதனடிப்படையில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் எனும் லோக் அதாலத் கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், குளித்தலை நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. காசோலை மோசடி, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, நிலப்பிரச்னை தொடர்பான வழக்குகள் என பல்வேறு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இரு அமர்வு, குளித்தலை நீதிமன்றத்தில் ஒரு அமர்வு என மூன்று அமர்வுகளில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 373 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 59 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3.79 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றங்களில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் சங்கத்தினர், வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான எம்.பாக்கியம் செய்திருந்தார்.



Tags : Lok Adalat ,Karur ,
× RELATED கரூர் சுங்ககேட்டில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு